Tag Archives: சிறுவர் கதைகள்

பொறுப்பான நாயும், பொறுப்பில்லா முதலாளியும்

dogandowner

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு, கடைக்காரர் விரட்டி விட்டார். திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு. என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு. கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு,மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார்.

நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார். அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது. அப்போது ரெட் சிக்னல். அந்த நாய் ரோட்டை கடக்காமல் நின்றது. பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது. கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்.

அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார்.இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்.

நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க.. ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு சிக்னல் மதிச்சு பஸ்ல டிக்கெட்எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே என்றார். அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

வாழ்க்கை பாடத்தில் நிறைய கற்று கொள்ளலாம் !!!!!

மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து
கொண்டிருந்தனர். வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர். திடீரென
மழைச் சாரலும் வீசியது. வேகமாக
நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர். கணவர் வேகமாக
ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார். மழைச்
சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும்
இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின்
ஒரு பக்கத்தில் நின்று கணவனை
துணைக்கு அழைத்தால். இருட்டில்
எதுவும் தெரியவில்லை. மின்னல்
மின்னிய போது கணவன் பாலத்தின்
மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது
தெரிந்தது. தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை. அவளுக்கு
அழுகையாய் வந்தது. இப்படி பயந்து
அழைக்கிறேன். என்ன மனிதர் இவர்
திரும்பி கூட பார்க்கவில்லையே என
மிகவும் வருந்தினாள். மிகவும் பயந்து
கொண்டே கண்களை மூடிக் கொண்டு
கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல
மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள். ஒரு வழியாக பாலத்தை
கடந்துவிட்டாள். கணவரை
கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து
தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப்
பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.
சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்.

ஆனால்  உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார். தூரத்தில்
பார்க்கும் போது அன்பு இல்லாதவர்
போல இருந்தாலும் அருகில் சென்று
பார்க்கும் போது தான் அவரின் அன்பு
தெரியவரும். வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.
தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள்
புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?
நான் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகுவேன். அதான் கோவம் இல்லாமல். நிம்மதியாக வாழ முடிகிறது. வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம். எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

வஞ்சிப்புகழ்ச்சி !!!!!

செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முன் தன் டெம்போவை நிறுத்தினான் குணா. ‘பரவாயில்லையே குணா சீக்கிரத்திலேயே வந்திட்டியே!” சொல்லியவாறே கல்லாவிலிருந்து எழுந்து வந்து, குணாவின் தோளைத் தட்டிக் கொடுத்த செந்தில் மளிகை ஸ்டோர்ஸ் முதலாளி முருகேசன், அத்தோடு நில்லாது கடைக்குள் திரும்பி, ‘டேய்..நம்ம குணாவுக்கு ஒரு கூல் டிரிங்ஸ் உடைச்சுக் குடுடா!” ஆணையிட்டார்.

 

 பையன் கொண்டு வந்து கொடுத்த கூல் டிரிங்ஸை வாங்கி தானே தன் கையால் குணாவிற்கு கொடுத்து விட்டு, ‘நீ குடி குணா…நான் போய் மூட்டைகளை இறக்க ஏற்பாடு பண்றேன்!” சொல்லிவிட்டு நகர்ந்த அந்த முதலாளியைப். பார்க்கப் பெருமிதமாயிருந்தது குணாவிற்கு.

 

 அதே நேரம் உள்ளே, ‘ஹூம் டெம்போக்காரனையெல்லாம் உபசரிக்க வேண்டியிருக்கு, இல்லாட்டி வர்ற வழில மூட்டைக்கு அரைக் கிலோ, கால் கிலோன்னு பருப்புகளை உருவிடுவானுகளே!” தனக்குள் சொல்லிக் கொண்டார் முதலாளி.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail