Monthly Archives: September 2016

துரித உணவுகள்:

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது.

 

துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

மரத்தாலி கட்டி அடிக்கிறது

பழமொழி: மரத்தாலி கட்டி அடிக்கிறது.

 

பொருள்: மரத்தால் ஆன தாலியை ஒரு மணமான பெண்ணின் கழுத்தில் கட்டுவைத்துப் பின் அவளை அடிப்பது.

 

விளக்கம்: இச்செயல் கொடுங்கோன்மையின் உச்சியைக் குறிக்கிறது. முன்னாட்களில் சில கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்களில் சிலர் வரித்தொகையினை சரிவரச் செலுத்தமுடியாதபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணின் தங்கத்தாலியைக் கவர்ந்துகொண்டு, அப்பெண்ணுக்கு ஒரு மரத்தால் ஆன தாலியை அணியச்செய்து, பின் அவளை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

புத்திசாலிகள் !!!!

காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது. ”என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,”என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,’ஆமாம்,நாறுகிறது.’என்று சொல்லிற்று. உடனே சிங்கம்,”முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,”என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.


அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து. அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு, ”கொஞ்சம் கூட நாறவில்லை,”என்றது.
சிங்கம்,”மூடனே,பொய்யா சொல்கிறாய்?”என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது, ”நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.”சிங்கம் நரியை விட்டுவிட்டது.


நீதி: புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail