Monthly Archives: February 2016

உருளைக்கிழங்கை தோலுடன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்

potatoஆய்வு ஒன்றில் உருளைக்கிழங்கில் உள்ள லெக்டின் என்னும் பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே உருளைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.

உருளைக்கிழங்கில் இதய ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் பி6, நார்டச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது. பொதுவாக வைட்டமின் பி6 அதிகம் உள்ள உணவுகளை உட்கொண்டு வந்தால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். மேலும் உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை உள்ளதால், இதய பிரச்சனைகளின் அபாயம் குறையும்.

நரம்பு மண்டலத்தை அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வைட்டமின் பி உதவி புரிகிறது. இச்சத்து நரம்புக்கடத்திகளின் உற்பத்திக்கு உதவி, நரம்பு செல்களும், மூளையும் சுமுகமாக தொடர்பு கொள்ள உதவுகிறது. இத்தகைய வைட்டமின் பி உருளைக்கிழங்கில் ஏராளமாக உள்ளது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

உடலும், தோலும் தங்க நிறமாக ஜொலிக்க வேண்டுமா?

nayantharaஒவ்வொரு பெண்ணும் தான் தங்க நிறத்தில் ஜொலிக்க வேண்டும் என விரும்புகின்றனர். உங்கள் தோல் தங்க நிறமாக மின்ன எளிய வழிகள் இயற்கை முறையிலேய உள்ளது.

நாம் அன்றாடம் உணவில் பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பு செய்யும். குறிப்பாக தோலுக்கு மினு மினுப்பையும் கொடுத்து ஜொல்லிக்கவைக்கும்.

மேலும், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் உங்கள் உடலுக்கும், தோலுக்கும் மிகுந்த அழகை தரும்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தரும் மான் முத்திரை

maanmuthirai

கட்டைவிரல் நுனியை, மோதிர விரல் மற்றும் நடுவிரலின் முதல் ரேகைக் கோட்டில் வைத்து மிதமாக அழுத்த வேண்டும். மற்ற இரண்டு விரல்கள் நீட்டி இருக்க வேண்டும். உள்ளங்கை மேல்நோக்கிப் பார்த்தவாறு தொடையின் மேல் இரு கைகளிலும் முத்திரை பிடிக்க வேண்டும்.

காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.

பலன்கள் :

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும். நீர்க்கோவைப் பிரச்னையால் வரும் தலைவலி சரியாகும். மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும்.

சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும். வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும்.

காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail