Monthly Archives: January 2016

புற்றுநோயைத் தடுக்கும் தாவரத் தங்கம்

carrot

கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது. மேலும் புற்றுநோய் வராமல் தடுப்பதில் கேரட் முக்கியப் பங்காற்றுகிறது.

கேரட்டில் உள்ள கரோட்டின் எனும் சத்தானது, புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது

தவிர வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு.

உதாரணமாக குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட் சாறினை வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டு வர அவை குணமாகும். மேலும் கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியையும் அளிக்கிறது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

வெல்லம் ஒரு வரப்பிரசாதம்

jaggery

பனைவெல்லத்தைவிடவும், கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லத்தில் இரும்புச் சத்து அதிக அளவில் உண்டு. 100 கிராம் வெல்லத்தில் 2.64 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 80 மில்லி கிராம் கால்ஷியமும் உள்ளது. இரண்டும் சேரும் போது உடலுக்கு நல்ல வலு கிடைக்கும்.

இது தவிர பொட்டாஷியம், சோடியம்,  பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் துத்தநாகம் ஆகியவையும் வெல்லத்தில் உண்டு.

பெண்களுக்கு மாதவிடாயின் போது சோர்வாகவும், படபடப்பாகவும் இருக்கும். அந்த நிலையில் வெல்லம் சாப்பிட்டால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

இரவு நேரத்தில் காபி அருந்துவது உடலுக்கு நல்லதா ?

coffeeAtNight

காபியில் இருக்கும் காஃபின் எனும் வேதிப்பொருள், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர் களைத் தூண்டிவிடும். இதனால், மூளை சுறுசுறுப்பு அடையும். இரவு நேரத்தில் காபி அருந்துவது உறக்கத்தைப் பாதிக்கும். மாலை 6 மணிக்கு மேல் காபி அருந்துவதைத் தவிர்த்துவிடவும். காஃபின் சேர்க்கப்பட்ட கார்பனேட்டட் குளிர்பானங்கள், சாக்லேட்டுகளைத் தவிர்ப்பதும் நல்லது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail