Monthly Archives: December 2015

பச்சிளம் குழந்தைகளுக்கு தைலம் பயன்படுத்தலாமா?

childnasalblock

சளி , ஜலதோஷம் போன்ற தொந்தரவு உள்ள குழந்தைகளுக்கு மூக்கடைப்பு, மூச்சுவிட சிரமம் போன்றவை ஏற்படும். இதற்கு மூக்கினுள் விடும் “ஸலைன்” நேசல் ட்ராப்ஸ் மட்டும் போதுமானது. அதிகமாக தொந்தரவு இருந்தால் தைலம் தடவலாம்.

ஆனால் ஒரு வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு தைலம் தடவுவதை தவிர்ப்பது நல்லது.ஏனெனில் பெரும்பாலான தைலங்களில் கற்பூரம்(camphor) ஒரு மூலப்பொருளாக உள்ளது.

இது அளவுக்கு அதிகமாகப் போனால் வலிப்பு (fits) ஏற்படலாம். எனவே ஒரு வயதிற்கு குறைவான குழந்தகளுக்கு தைலம் உபயோகிக்கும்போது கவனம் தேவை.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

தொட்டுக் காட்டாத வித்தை, சுட்டுப் போட்டாலும் வராது

class

பொருள்

நடைமுறை அனுபவங்களுடன் கற்றுக்கொடுக்கப்படாத கல்வி உடலில் சூடுபோட்டாலும் மனதில் ஏறாது.

தமிழ் விளக்கம்

ஆசிரியர் கல்வி பயிற்றுவிக்கும்போது நடைமுறை உதாரணங்களையும் உலக அனுபவங்களையும் விளக்கிக் காட்டவேண்டும். அப்படி போதிக்கப்படாத கல்வியை உடலில் சூடுபோட்டாலும் அந்த வடுவின் நினைவாக மனதில் ஏற்றமுடியாது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

உடல் ஆரோக்கியம் நகத்தில் தெரியும்

nail

லேசான சிவப்பு நிறத்தில் சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால் உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

 விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

நகம் மஞ்சள் நிறமாகவோ, வெளிர் மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால் மஞ்சள் காமாலையின் அறிகுறி.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் இருந்தால் உடல் நலம் குன்றி இருப்பதற்கு அடையாளம். கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து குறைபாடுகள் இருந்தாலும், நகம் உடைந்தோ, குறுக்கே கோடுகளுடனோ காணப்படும்.

நகத்தில் புள்ளி புள்ளியாக குழிகள் காணப்பட்டால் ‘சோரியாசிஸ்’ எனப்படும் சரும நோய் ஏற்படும். நகம் தடித்து கரடு முரடாக காணப்பட்டாலோ பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருக்கும். நகங்களின் அடியில் எண்ணெய் விட்டதுபோல காணப்படும். இதற்கு ‘ஆயில் ட்ராப் சிண்ட்ரோம்’ என்று பெயர். இதுவும் சரும நோயான சோரியாசிஸின் ஆரம்ப அறிகுறியே. சரும மருத்துவரை ஆலோசித்தே பிரச்னையை அறிய வேண்டும்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail