Monthly Archives: September 2015

காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைத்த அகத்திய முனிவர்

agathiyamunivar

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான்,

காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள். காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை.

அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ காவேரி நதியில் நீராடு. உன் பாவம் நீங்கும்” என்றார்.

அந்த சமயம், கர்ப்பவதியாக இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி வந்தது.

கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய் பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள். வருடம் வருடம் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந் நாராயணன்!

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

முக பளபளப்புக்கு..

bf1

உலர்ந்த மகிழம் பூ பொடி – 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி – 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி – 100 கிராம்
கோரை கிழங்கு பொடி – 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் – 150 கிராம்

இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும்.

இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

பிரசவத்திற்கு பின் வயிற்று சதை குறைய வேண்டுமா!

delivery belly நம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை.

பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும், பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும்.

இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail