Monthly Archives: August 2015

பதிமூன்று ,பதினான்கு முக ருத்ராட்சை பலன்

14

பதிமூன்று முக ருத்ராட்சை அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை விஷ்வதேவர்களை குறிக்கிறது. “ஓம் ஹ்ரீம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். பாவங்கள் நீங்க இதனை அணியலாம். இந்த ருத்ராட்சை உங்கள் “ஓம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

பொதுவில் ருத்ராட்சை மணிகள் தங்களை சுற்றியுள்ள வெப்பத்தை கிரகித்துக் கொண்டு சுற்றுப்புறத்தினை குளிர்விக்கும் தன்மை உடையவை. இதனை உடலில் அணிவதால் குளிர்ச்சியாகும்

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

பனிரெண்டு முக ருத்ராட்சை மந்திரம்

fourfaceruthratchai

சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும்.

“ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ” என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

 

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

அன்னப்பிரசானம்

annaprasana

குழந்தைக்கு முதல் சோறு கொடுப்பதை “அன்னப்பிரசானம்’ என்பர். கிராம மக்கள் தங்கள் குல தெய்வக் கோயில்களில் இதைச் செய்வர். வசதி படைத்தவர்கள் பெரும்பாலும் குருவாயூர் குருவாயூரப்பன் சன்னதியில் இந்த சடங்கைச் செய்வது வழக்கம். தமிழகத்தில் அன்னப்பிரசானத்துக்கு மிகச் சிறந்த தலம் தஞ்சை மாவட்டத்தில் சந்திரனுக்குரிய ஸ்தலமாக கருதப்படும் திங்களூர் கைலாசநாதர் கோயிலாகும்.

அசுவினி, மிருகசிரீஷம், உத்திரம், சுவாதி, திருவோணம், சதயம், ரேவதி நட்சத்திர நாட்களிலும், சந்திரஹோரை வேளையிலும் சந்திரனையும், பசுவையும் குழந்தைக்கு காண்பித்து, வெள்ளிக் கிண்ணத்தில் பால், நெய், தேன் கலந்த சாதத்தை ஊட்ட வேண்டும்.

இவ்வாறு உண்ணும் குழந்தைகளுக்கு ஜலதேவதையின் அருளும், ஒளஷதி தேவதையின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஜலதேவதையின் அருளால், குழந்தைக்கு ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அண்டாது என்றும், அப்படியே வந்தாலும் ஒளஷதி (மருந்து) தேவதையின் அருளால் அது உடனே நீங்கி விடும் என்பதும் இந்த கோவிலின் விசேஷம்.

குழந்தைகளுக்கு சந்திரனை காட்டி சோறூட்டுவது ஏதோ விளையாட்டுக்காக மட்டுமல்ல, அதில் ஆன்மிகக்காரணமும் புதைந்து கிடக்கிறது என்பதால்தான். இந்த கோவிலில் அன்னப்பிரசானம் ஊட்டுபவர்கள் கோவிலுக்கு செல்லும் முதல் திங்கட்கிழமையில் இருந்து அசைவ உணவு எதுவும் கலக்காமல் சைவ உணவு மட்டும் சாப்பிட்டு ஒருவேளை மட்டும் விரதமிருந்து சென்றால் சிறப்பு.

குழந்தை இல்லாதவர்களும் இத்தலத்தின் கைலாசநாதரை விரதமிருந்து வழிபட்டு குழந்தை பிறந்தால் இக்கோவிலில் அன்னப்பிரசானம் ஊட்டி வழிபடுகிறேன் என வேண்டிகொண்டு வந்து, குழந்தை பிறந்தவுடன் அந்த நேர்ச்சையை நிறைவேற்றலாம்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail