Category Archives: பழமொழிகள்

தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்…

பழமொழி: தட்டான் தாய்ப்பொன்னிலும் மாப்பொன் திருடுவான்.

 

பொருள்: தன் தாய்க்கு நகை செய்தாலும் பொற்கொல்லன் அதில் கொஞ்சம் தங்கத் துகள் திருடுவான்.

 

விளக்கம்: பொற்கொல்லர்கள் பொதுவாக ஏமாற்றுபவர்களாக அக்காலத்தில் கருதப்பட்டனர். இன்றோ கொடுப்பதில் நாணயம் குறைந்து ஏமாற்றுவது என்பது கடையுடமையாக்கப் பட்டுள்ளது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான் ….

பழமொழி: சம்பந்தி கிரஹஸ்தன் வருகிறான், சொம்பு தவலை உள்ளே வை.

 

பொருள்: நாணயமான நம் சொந்தக்காரர், அதாவது நம் சம்பந்தி வருகிறார், சொம்பு, தவலை முதலிய பித்தளைப் பாத்திரஙளை உள்ளே வை அல்லது வெளியே வை.

 

விளக்கம்: சொந்தக்காரர்களிடையேயும் திருடர்கள் உண்டு. அதிலும் சம்பந்தி வீட்டில் திருடும் வழக்கம் இருந்தது என்று தெரிகிறது.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.

பழமொழி: நாலாம் தலைமுறையைப் பார்த்தால் நாவிதனும் சிற்றப்பனாவான்.

 

பொருள்: இன்றுள்ள ஒருவரது ஜாதி போன தலைமுறைகளில் தொடர்ந்து அதுவாகவே இருந்திருக்க வாய்ப்பு குறைவு.

 

விளக்கம்: மூன்று தலைமுறைகளுக்கு நீத்தார் கடன்கள் செய்வது வழக்கம். அம்மூன்று தலைமுறைகளை பொறுத்தவரை ஒருவருடைய ஜாதி உறுதியாகத் தெரிகிறது. அதற்குமேல் ஆராய்ந்தால், ஜாதிக் கலப்பு இருந்தது புலனாகலாம். இன்றுள்ள எல்லா ஜாதிகளும் அன்றுமுதல் மாறுதல் இல்லாமல் இருந்தனவல்ல என்பது செய்தி.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail