Category Archives: ஆன்மீகம்

ஆலய வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவை:

  1. இயல்பான முழுமையான நம்பிக்கையுடன், நேர்த்தியாக, பூரண மன அமைதியுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.
  2. பூஜைக்கு விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, நைவேத்யம், தட்சணை இவை முக்கியம்.
  3. சின்னச்சின்ன பூஜைகளை விட அனைத்தும் அடங்கிய முறையான ப்ரத்யேக பூஜைதான் பலன்களை அள்ளித் தருகின்றன.
  4. ஆண்டவன் நினைத்தால் மட்டுமே பூஜைக்குரிய அனுமதி கிடைக்கும்.
  5. ஆண்டவனை நினைத்துக் கொண்டே இருங்கள். காலம் கனியும்போது ஆண்டவன் நம்மை நினைப்பார்.
Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

மெய்ப்பதம் !!!!!

பிறர் உன்னை வைவார்களாயின் அந்த வன்சொற்களை இன் சொற்களாக கருது.

 

நீ எக்காரணத்தைக் கொண்டும் எப்போதும் எவ்விடத்தும் பிறரை வன்சொல் கூறி வையாதே.

 

கிடைத்தது கூழாயினும் அதனை நெய்யன்னமாகக் கருதி உணவு செய்.

 

பழம் பாயேயானாலும் பஞ்சனையாகக் கருதிப் படு.

 

கசப்புப் பெருளாயினும் அதனைக் கற்கண்டாகக் கருதி
உட்கொள். அதனால் மெய்ப்பதம் காண்பாய்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail

இன்பமும் துன்பமும் !!!!!

இன்பமும் துன்பமும் உனது  மனதிலிருந்து உண்டாகின்றன; மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகிறது.

தீய மனம் நரகத்தைத் தருகிறது. நன்மனம் பரகதியைத் தருகிறது.
மனத்தழுக்கு அற்றவரே பெரியார்.

மனத்துக்கண் மாசில்லாமல் இருந்தால் எல்லா அறங்களும் உண்டாகும். ஆதலினால் உன் மனம் பளிங்குபோல் இருக்கட்டும்.

Share to your friends
FacebookTwitterGoogle+WhatsAppGoogle Gmail